< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்
மாநில செய்திகள்

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
6 Oct 2023 12:15 AM IST

திருமக்கோட்டையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமக்கோட்டை:

திருமக்கோட்டையில் டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க தலைவர் பூபாலன் முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார், ஒன்றிய கவுன்சிலர் சோமாவெற்றிவேல், மேலநத்தம் ஆர்.ஜி.ரவி, சாமிநாதன், ராதாகிருஷ்ணன், புகழேந்திரன், திருமக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதாஜெயசீலன், தென்பரை ஊராட்சி மன்ற தலைவர் ராஜகோபால், எளவனூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் மற்றும் வல்லூர் ராதா நரசிம்மபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

---

மேலும் செய்திகள்