< Back
மாநில செய்திகள்
விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
4 Oct 2023 2:51 AM IST

நெல்லையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த மத்திய மந்திரியின் மகனை கைது செய்ய வேண்டும். அந்த மத்திய மந்திரி பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் காசிவிஸ்வநாதன், எச்.எம்.எஸ். மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியன், ஏ.ஐ.சி.சி.டி.யு. பொதுச்செயலாளர் கணேசன், டி.டி.எஸ்.எப்.நிர்வாகி சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச. நிர்வாகிகள் முருகன், மகாவிஷ்ணு, பாலு, சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் செல்லத்துரை, சுடலைராஜ், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் சடையப்பன், ரெங்கன், உலகநாதன் மற்றும் எச்.எம்.எஸ்.நிர்வாகிகள், கூட்டுறவு பேரங்காடி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்