< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|28 Sept 2023 1:45 AM IST
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் அரபுமுகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை சர்க்கரை ஆலை நிர்வாகம், கடன் தள்ளுபடி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி விவசாயிகளுக்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும். விவசாயிகளிடம் பெற்ற தொகையை வட்டியுடன் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.