< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் போராட்டம்
தேனி
மாநில செய்திகள்

விவசாயிகள் போராட்டம்

தினத்தந்தி
|
5 July 2023 1:00 AM IST

தேனி மாவட்ட எல்லை குமுளி அருகே வனப்பகுதியில் விவசாயிகள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்ட தமிழக எல்லை, குமுளி அருகே கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட அமராவதி வனப்பகுதியில் ஆசாரிபள்ளம் என்ற இடத்தில் கூடலூர் பகுதியைச் சேர்ந்த சிலர் ஏலக்காய், மிளகு, காபி பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளனர். அங்கு கடந்த 1992-ம் ஆண்டுக்கு பிறகு வனப் பகுதியில் இருந்த விவசாயிகள் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் 18 குடும்பங்களுக்கு சாதகமாக உத்தரவு வந்துள்ளதாகக்கூறி, கடந்த 2-ந்தேதி முதல் வனப்பகுதியில் கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வனத்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ேதால்வி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் வனப்பகுதியிலேயே தங்கிவிட்டனர். 3-வது நாளாக நேற்று கொட்டும் மழையிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், போராட்டம் நடக்கும் இடத்துக்கு வனக்காவலர்கள் மட்டும் வந்து நாங்கள் எத்தனைபேர் வனப்பகுதியில் தங்கி உள்ளோம் என கணக்கெடுத்து செல்கின்றனர். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை, என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்