< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
பயிர் காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் மறியல்
|14 Oct 2023 12:45 AM IST
பயிர் காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
மணமேல்குடி தாலுகாவில் பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இந்தநிலையில், பயிர் காப்பீட்டுத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ராமநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணமேல்குடி தாசில்தார் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.