< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் கையெழுத்து இயக்கம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

விவசாயிகள் கையெழுத்து இயக்கம்

தினத்தந்தி
|
9 Jun 2023 12:15 AM IST

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தியாகதுருகத்தில் விவசாயிகள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

தியாகதுருகம்,

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023- ஜ திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் கையெழுத்து இயக்கம் தியாகதுருகத்தில் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் தெய்வீகன் தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பினர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத் தலைவர் ஸ்டாலின்மணி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து பொது மக்கள் பலர் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் வட்டக் குழு உறுப்பினர்கள் அருள்தாஸ், செல்வராஜ், முருகன், செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்