< Back
மாநில செய்திகள்
மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் வாங்குவதாக கூறி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் வாங்குவதாக கூறி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
30 April 2023 2:55 PM IST

மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் வாங்குவதாக கூறி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் அய்யனேரி அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு ரூ.50 அதிகமாக வாங்குவதை கண்டித்தும், பதிவு மூப்பு அடிப்படையில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய கோரியும் விவசாய சங்கம் சார்பில் நேற்று நெல் கொள்முதல் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பகுதி செயலாளர் குப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அய்யனேரி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் கேட்பதாகவும், பதிவு மூப்பு அடிப்படையில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில்லை எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்த ஆர்.கே. பேட்டை வேளாண்மை துறை கூடுதல் இயக்குனர் தாமோதரன், ஆர்.கே.பேட்டை தாசில்தார் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்