< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்
மாநில செய்திகள்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
30 Jun 2023 12:15 AM IST

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் அரசு நிர்ணயித்த விலையை விட குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகள் பருத்தி கொள்முதல் செய்வதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், அனைத்து இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து ஆலங்குடி கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் கலியபெருமாள், விவசாய சங்க ஒன்றிய தலைவர் இளங்கோவன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பாலையா, ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன், பால்உற்பத்தியாளர் சங்க ஒன்றிய செயலாளர் நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் ராதா உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டு குறைந்த விலைக்கு பருத்தி கொள்முதல் செய்வதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்