< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
தர்மபுரி உழவர் சந்தையில் பீன்ஸ் ரூ.105-க்கு விற்பனை
|25 Oct 2023 1:00 AM IST
தர்மபுரி உழவர் சந்தையில் வரத்து குறைந்ததால் பீன்ஸ் விலை கிலோவிற்கு ரூ.10 உயர்ந்து ரூ.105-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுக்கு பீன்ஸ் வரத்து குறைந்தது. இதன் காரணமாக பீன்ஸ் விலை அதிகரித்தது. கடந்த வாரம் 1 கிலோ ரூ.80-முதல் ரூ.90 வரை பீன்ஸ் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.10 விலை உயர்ந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று முன்தினம் 1 கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் நேற்று கிலோ ரூ.105-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் 1 கிலோ ரூ.120 வரை விற்பனை ஆனது.