< Back
மாநில செய்திகள்
தர்மபுரி உழவர் சந்தையில்வாழைத்தண்டு விலை குறைந்தது
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி உழவர் சந்தையில்வாழைத்தண்டு விலை குறைந்தது

தினத்தந்தி
|
2 Aug 2023 1:00 AM IST

தர்மபுரி:

தர்மபுரியில் வரத்து அதிகரிப்பு காரணமாக வாழைத்தண்டு விலை நேற்று ரூ.5 குறைந்தது. 1 வாழைத்தண்டு ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஊட்டச்சத்துக்கள்

பொதுமக்கள் அதிகளவில் விரும்பி சாப்பிடும் நார்சத்துக் கொண்ட உணவுப் பொருட்களில் ஒன்றாக வாழைத்தண்டு உள்ளது. வாழைத்தண்டை கூட்டு, சாம்பார் ஆகியவற்றில் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். வாழைத்தண்டில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மையை சீர் படுத்தும் தன்மை கொண்ட வாழைத்தண்டு செரிமானத்தை மேம்படுத்துகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், சிறுநீரக கல்லை கரைக்கவும் வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

விலை குறைந்தது

பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதால் வாழைத்தண்டு விற்பனை எப்போதும் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெறுவது வழக்கம். தர்மபுரி உழவர் சந்தையில் கடந்த சில நாட்களாக வாழைத்தண்டு வரத்து வழக்கத்தை விட குறைந்தது. அதன் காரணமாக விலை சற்று அதிகரித்தது. 1 வாழைத்தண்டு ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் வாழைத்தண்டு வரத்து நேற்று கணிசமாக அதிகரித்ததால் அதன் விலை ரூ.5 குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் 1 வாழைத்தண்டு ரூ.10- க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெளிமார்க்கெட்டுகளில் 1 வாழைத்தண்டு.ரூ.15 முதல் ரூ.20 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.

விலை கணிசமாக குறைந்ததால் வாழைத்தண்டை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

மேலும் செய்திகள்