டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
|தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பஞ்சாப், அரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். தொடர்ந்து பஞ்சாப், அரியானா எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக, தஞ்சை பாபநாசம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்று ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதேபோல் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.