< Back
மாநில செய்திகள்
15-வது தவணை தொகை பெற விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்
விருதுநகர்
மாநில செய்திகள்

15-வது தவணை தொகை பெற விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்

தினத்தந்தி
|
9 Sept 2023 3:58 AM IST

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 15-வது தவணை தொகை பெற விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 15-வது தவணை தொகை பெற விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயனாளிகள்

விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் உழவர் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் 50,621 பயனாளிகள் உள்ளனர். ஒரு ஆண்டில் மொத்தம் 3 தவணைகளில் ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் 14 தவணைத் தொகை விடுவிக்கப்பட்டு விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். 15-வது தவணைத் தொகை விடுவிக்கப்படுவதற்கு பயனாளிகள் தங்களது வங்கி கணக்கினை ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியமாகும்.

மேலும் இ-கேஒய்சி அதாவது மின்னணு வகையில் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் என்பதனை அனைத்து பயனாளிகளும் பதிவிறக்கம் செய்வது கட்டாயமாகும். மேற்காணும் வழிமுறைகளை பூர்த்தி செய்த பயனாளிகள் மட்டுமே 15-வது தவணை தொகையை பெற முடியும்.

விவசாயிகளுக்கு பதிவு

மாவட்டத்தில் இன்னும் 4,871 பயனாளிகள் இப்பதிவினை முடிக்கவில்லை என விவரம் அறியப்பட்டுள்ளது. பதிவினை மேற்கொள்ள தபால் துறையிலும் முகாம்கள் நடத்தப்படுகிறது. பயனாளிகள் தங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தல் மற்றும் பயனாளிகள் தங்களது செல்போனுக்கு வரும் ஓ.டி.பி.யை கொண்டு பதிவு செய்யலாம். பொது சேவை மையங்களில் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து முடிக்கலாம்.

விவசாயிகள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்த பி.எம். கிசான் செயலி மூலம் 50 பேருக்கு பதிவு செய்யலாம் மற்றும் ஒரு அலுவலர் தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த செயலி மூலம் 500 விவசாயிகளுக்கு பதிவு செய்யலாம்.

தவணைத்தொகை

எனவே விருதுநகர் மாவட்ட பிரதமர் விவசாய திட்ட பயனாளிகள் இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவினை முடித்து வரவிருக்கும் 15-வது தவணைத்தொகையை அனைத்து பயனாளிகளும் பெற்று பயனடைய வேண்டுகிறோம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்