பெரம்பலூர்
தோட்டக்கலைத்துறையின் நலத்திட்டங்களை பெற விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்
|தோட்டக்கலைத்துறையின் நலத்திட்டங்களை பெற விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலம், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்களும் வழங்கப்படுகின்றன. 2022-23-ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணையவழியில் பதிவு செய்ய வேண்டும்.
"இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே, அனைத்து பலன்களும் வழங்கப்படும். இதற்காக விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்ய தெரியாத, இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் இந்திரா தெரிவித்துள்ளார்.