அரியலூர்
அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
|அரியலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந்தேதி காலை 10.30 மணியளவில், கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் அரங்கில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வேளாண்மை துறை சார்பில் வேளாண் சங்கமம்-2023 என்ற நிகழ்ச்சி வருகிற 27, 28, 29 ஆகிய தேதிகளில் திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளதால் விவசாயிகள் அதில் கலந்து கொள்ள ஏதுவாக ஜூலை மாத அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளார்.