< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
|20 July 2022 12:57 AM IST
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. நிகழ்ச்சியில் ஜூன் மாத நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் நேரில் பெறப்படும். கோரிக்கை மனுக்கள் பதிவு செய்து ஒப்புகை பெறும் வசதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.