< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
28-ந் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
|20 July 2023 12:00 AM IST
விவசாயிகள் குறைதீர் கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது.
அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.