வேலூர்
விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
|வேலூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை நடக்கிறது.
வேலூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரத்துறை, பால்வளத்துறை உள்பட பல்வேறுத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் கோரிக்கை, குறைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.
மேலும் கடந்த மாதம் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளனர்.
எனவே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தனிநபர் பிரச்சினைகளை மனுவாகவும், பொதுப்பிரச்சினைகளை கோரிக்கையாகவும் தெரிவிக்கலாம்.
இந்த தகவலை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.