< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
29 Sept 2022 4:20 AM IST

நெல்லையில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது

நெல்லை மாவட்டத்தில் இந்த செப்டம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்