< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
தேனி
மாநில செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
19 Oct 2023 3:45 AM IST

தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.

தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) பகல் 11 மணியளவில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். கோரிக்கை தொடர்பான மனுக்களையும் அளிக்கலாம். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மீது தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகவல் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்