< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
|28 Sept 2023 12:23 AM IST
திருவாரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
திருவாரூர்;
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1.35 மணி வரை திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.எனவே குறைதீர்க்கும் கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தொிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்தி்க்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.