< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
9 Sept 2023 1:30 AM IST

திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டம் மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது. இதில் ஆர்.டி.ஓ. கமலக்கண்ணன், வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு குறைகளை கேட்க உள்ளனர். எனவே விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வேளாண்மை தொடர்பான குறைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்