< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
20 Oct 2023 3:34 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26-ந்தேதி நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. இந்த கூட்டம் 26-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்