< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
8 Aug 2022 4:48 PM IST

தூத்துக்குடியில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து விவசாயிகளும் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காண வசதியாக கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி தூத்துக்குடி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் வியாழக்கிழமை அன்று நடத்தப்பட உள்ளது. இந்த மாதத்துக்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் வட்டம் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தெற்கு பீச் ரோட்டில் உள்ள வ.உ.சி. துறைமுக ஆணைய மண்டபத்தில் நடக்கிறது.

எனவே தூத்துக்குடி கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்