< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
திருவாரூரில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
|28 Dec 2022 12:15 AM IST
திருவாரூரில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்துக்கான (டிசம்பர்) திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.