< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
உரிய விலை கிடைக்காததால் நடுரோட்டில் வெண்டைக்காய்களை கொட்டிய விவசாயிகள்
|2 Dec 2022 7:58 AM IST
திருநெல்வேலியில் உரிய விலை இல்லாததால் வெண்டைக்காய்களை விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனர்.
திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம் மானூரில், வெண்டைக்காய்க்கு உரிய விலை இல்லாததால், விற்பனைக்கு கொண்டு வந்த காய்களை விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனர்.
மானூர் பகுதியில் பயிர் செய்யப்படும் வெண்டைக்காய்கள், மொத்த காய்கறி சந்தைகளில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால், வெண்டைக்காய்க்கு போதிய விலை இல்லாததால் மனம் உடைந்த விவசாயிகள், விற்பனைக்கு கொண்டு வந்த காய்களை சாலையில் கொட்டிச் சென்றனர்.
இதனிடையே, காய்கறி பயிர்களுக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.