நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்-சசிகலா
|ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனே முன் வரவேண்டும்.
சென்னை,
சசிகலா வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனே முன் வரவேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி, பனப்பாக்கம், திமிரி, அம்மூர், சோளிங்கர், அரக்கோணம், காவேரிபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 70,000 ஏக்கருக்கு மேலாக நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தினால், விவசாயிகள் மிகவும் பாதிப்படையக்கூடும்.
விவசாயிகள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மிகவும் சிரமப்பட்டு நெல்லை பயிரிட்டுள்ளனர். தற்போது நெல்லை அறுவடை செய்தவுடன் கொள்முதல் நிலையங்களில் உடனே போடமுடியவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் நஷ்டம் அடையக்கூடும் என்று விவசாயிகள் மிகவும் வேதனைப்படுகின்றனர்.
மேலும், இந்த பகுதிகளில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ள நிலையில், விளைவித்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாவதற்குள், நெல்லை கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே மேற்கொள்ளவேண்டும்.
எனவே, ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.