< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் கோரிக்கை
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

விவசாயிகள் கோரிக்கை

தினத்தந்தி
|
2 Oct 2023 12:15 AM IST

எருக்கூரில் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

எருக்கூரில் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

பாசன-வடிகால் வாய்க்கால்

கொள்ளிடம் அருகே எருக்கூரில் பாசன மற்றும் வடிகால் கிளை வாய்க்கால் நவீன அரிசி ஆலை அருகில் உள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மழைக்காலத்தில் வயல்களில் தேங்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றும் வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது. இந்த வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாமல் விடப்பட்டதால் தூர்ந்து போய் அகலமும், ஆழமும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையால் வயல்களில் பல நாட்கள் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் விடப்பட்டதால் தண்ணீர் விரைந்து வெளியேறி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தூர்வார வேண்டும்

இதனால் கடந்த ஆண்டு சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இந்த வாய்க்காலின் ஓரத்தில் இருந்த சிமெண்டு கான்கிரீட் சுவர் உடைந்து விழுந்தும் வாய்க்கால் அடைபட்டு உள்ளது. இதனால் பாசனத்திற்கு வரும் தண்ணீர் கடைமடை பகுதியான எருக்கூர் பகுதியில் வயல்களுக்கு சென்று சேர்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வரும் பருவ மழை அதிகம் பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தண்ணீர் எளிதில் வெளியேறி செல்வது தடைபடும். எனவே விவசாயிகளின் நலன் கருதி எருக்கூர் பாசன மற்றும் வடிகால் வாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்தியும், அகலப்படுத்தியும் அதில் உள்ள அடைப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எருக்கூர் விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்