< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்
|14 July 2022 11:25 PM IST
வேடசந்தூரில் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
வேடசந்தூரில் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் சின்னச்சாமி தலைமை தாங்கி பேசினார். வட்டார விவசாயிகள் நலச்சங்கம் தலைவர் குணசேகரன், செயலாளர் கருப்புச்சாமி, வீ.புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் குப்புச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி வரவேற்றார்.
கூட்டத்தில் தோட்டக்கலை துணை அலுவலர் விஜயகுமார், உதவி வேளாண் அலுவலர் லலிதா பேசினர். இதில் தமிழக அரசால் வேளாண் சார்ந்த தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக்கு மானியத்துடன் கடன் வசதி, வேளாண் கருவிகள், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சலுகைகள் பெறுவது குறித்து விளக்கி கூறினர்.