நீலகிரி
முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புகார்: கூட்டுறவுத்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்-குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம் தீர்மானம்
|கூட்டுறவுத்துறைகளில் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்ததால் வெள்ளை அறிக்கை ெவளியிட ேவண்டும் என்று குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குன்னூர்
கூட்டுறவுத்துறைகளில் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்ததால் வெள்ளை அறிக்கை ெவளியிட ேவண்டும் என்று குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர கூட்டம் குன்னூரில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் எஸ்.மனோகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். செயலாளர் ஆல்துரை அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் இந்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடந்து முடிந்த நிலையில் பள்ளி, கல்லூரி செல்வோர் பஸ்களில் அடைத்துக்கொண்டு செல்வதையும் தொங்கிக்கொண்டு செல்வதையும் பஸ்சிற்காக காத்திருப்பதையும் காணமுடிகிறது. மேலும் எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் மாணவர்கள் மாலை நேரத்தில் வனப்பகுதிகளில் அச்சத்துடன் செல்கின்றனர்.எனவே பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் நோட்டுப்புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் விற்பனை செய்வதுடன் அங்கேயே வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதால் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே சரியான விலையில் விற்கப்படுகிறதா? உரிய பில் வழங்கப்படுகிறதா? விற்பனை உரிமம் பெற்று வரி செலுத்தப்படுகிறதா? என்பது குறித்து வணிக வரித்துறை, நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முறைப்படுத்தப்பட வேண்டும்.
வெள்ளை அறிக்கை
கிராமப்புறங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகளிடம் வாங்கப்படும் பங்குத் தொகையை கடன் முடிந்த உடன் திருப்பி தராமல் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இது குறித்து கூட்டுறவுத் துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டன. முடிவில் இணைச் செயலாளர் தர்மசீலன் நன்றி கூறினார்.