< Back
மாநில செய்திகள்
வாழை, மரவள்ளிகிழங்குக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

வாழை, மரவள்ளிகிழங்குக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்

தினத்தந்தி
|
15 Oct 2022 6:45 PM GMT

செம்பனார்கோவில் பகுதியில் பயிரிடப்படும் வாழை, மரவள்ளிகிழங்குக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருக்கடையூர்:

செம்பனார்கோவில் பகுதியில் பயிரிடப்படும் வாழை, மரவள்ளிகிழங்குக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காப்பீடு திட்டம்

செம்பனார்கோவில் வட்டார பகுதியில் ரபி பருவத்தில் பயிரிடப்படும் வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதன்மூலம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள், வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் மகசூல் இழப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்கலாம்.

பிரீமிய தொகை

அதன்படி, வாழைப்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,365-ம், மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1,017-ம் பிரீமிய தொகை செலுத்த வேண்டும். இதனை வருகிற 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்.இத்திட்டத்தை குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி கொள்ளலாம். பயிர் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி பயன் பெறலாம்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்