< Back
மாநில செய்திகள்
தலைவாசல் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்
சேலம்
மாநில செய்திகள்

தலைவாசல் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

தினத்தந்தி
|
26 Oct 2023 1:49 AM IST

லத்துவாடி ஊராட்சியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு தலைவாசல் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடந்தது.

தலைவாசல்:-

தலைவாசல் ஒன்றியம் லத்துவாடி ஊராட்சியில் சுமார் 3,500 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள விவசாயிகள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இங்குள்ள அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்தும், வீடு கட்டியும் வசித்து வருவதாக தெரிகிறது. இதனால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட முடியாமல் விவசாயிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அனுப்பியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று தலைவாசல் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தாசில்தார் பாலகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பிறகு விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தலைவாசலில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்