< Back
மாநில செய்திகள்
வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

தினத்தந்தி
|
6 Oct 2023 12:15 AM IST

பயிர் காப்பீடு தொகை வழங்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆர்.எஸ்.மங்கலம் வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஆர்.எஸ்.மங்கலம்,.

வேளாண் அலுவலகம் முற்றுகை

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சேத்திடல், வரவணி, செங்குடி ஆகிய வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பயிர் காப்பீட்டு தொகை வழங்காததால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிட அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் ஒரு வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவன அதிகாரியிடம் மாவட்ட கலெக்டர் மூலமாக பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன் அடிப்படையில் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்