< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
விவசாய சங்கத்தினர் முகமூடி அணிந்து நூதன ஆர்ப்பாட்டம்
|16 March 2023 8:59 PM IST
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் முகமூடி அணிந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் முகமூடி அணிந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி கோட்ைட மைதானம் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் மக்கள் வழிகாட்டி இயக்கம் மற்றும் விவசாய சங்கம் உள்ளிட்ட சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் மக்கள் வழிகாட்டி இயக்க மாநில தலைவர் ராஜேஷ் தலைமையில் முகத்தை நூதனமாக முகமூடி அணிந்து வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.