< Back
மாநில செய்திகள்
மானியத்தில் உரம் பெற சாதி விவரம் கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மானியத்தில் உரம் பெற சாதி விவரம் கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
4 March 2023 1:58 PM IST

மானியத்தில் உரம் பெற சாதி விவரம் கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரசாயன உரங்களின் தேவையும், விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு உரம் தயாரிக்கும் மூலப்பொருட்களின் விலை உயரும்போது, ரசாயன உரங்களின் விலையும் அதிகரிக்கிறது. இதனால் அடியரமான டி.ஏ.பி., மேல் உரமான யூரியா போன்றவற்றை விவசாயிகளுக்கு மானியத்தில் அரசு வழங்கி வருகிறது.

அத்துடன், டி.ஏ.பி.யும், யூரியாவும் விவசாய பயன்பாடு போக, பல்வேறு பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. இதனால் விவசாய பயன்பாடு என்ற போர்வையில் வணிக ரீதியான பொருட்கள் தயாரிப்புக்கும் அவை மானியத்தில் பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இவற்றின் விற்பனையை தீவிரமாக கண்காணிக்க அரசு முடிவெடுத்தது.

அதன்படி விவசாயிகள் தங்களது ஆதார் உரமானியத்தை பதிவு செய்யும் பி.ஓ.எஸ். எந்திரத்தில் சாதி பிரிவு தளம் சேர்க்கப்பட்டுள்ளது.

அட்டை நகலை சம்பந்தப்பட்ட உரக்கடைகளில் கொடுத்து, பி.டி.எஸ். எனப்படும் எந்திரத்தில் கைரேகை பதித்து உரங்களை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் உண்மையான விவசாயிகளுக்கு மானியத்தில் உரங்கள் வழங்கப்படுவதால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கு புதிய விதிமுறையை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

உரம் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் நகலுடன், தங்களது சாதி பற்றிய விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். பொதுபிரிவு. ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி, என்ற பிரிவுகளில் தங்களது வகைப்பாட்டை விவசாயிகள் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் உரக்கடைகளில் அரசின் மானிய விலையில் உரம் வாங்க சென்ற விவசாயிகளிடம் இதுகுறித்து கடைக்காரர்கள் தெரிவித்தனர். இதனை அறிந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாய இடுபொருட்கள் சங்க தலைவர் என்.ரகுராமன் கூறுகையில்:-

எப்போதும் இல்லாத வகையில் நேற்று முன் தினம் முதல் விவசாயிகளின் சாதி குறித்த விவரம் கேட்பது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாதி குறித்து கேட்பதால் விவசாயிகள் உரம் வாங்குவதற்கு ஏன் ? சாதி பற்றி கேட்கிறீர்கள் என்று தகராறில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே இதனை தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்