< Back
மாநில செய்திகள்
கரும்பு வெட்டி அனுப்பிய 40 நாட்களில் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா
விழுப்புரம்
மாநில செய்திகள்

கரும்பு வெட்டி அனுப்பிய 40 நாட்களில் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா

தினத்தந்தி
|
11 March 2023 12:15 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு வெட்டி அனுப்பிய 40 நாட்களில் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா சர்க்கரை ஆலை நிர்வாகம் ஒப்புதல்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் விவசாய தொழிலை பிரதானமான கொண்டுள்ள மாவட்டமாகும். இம்மாவட்டம் கரும்பு உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. தற்போது பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலையை தவிர்த்து விவசாயிகளின் ஒட்டுமொத்த கரும்புகளையும் அரவைக்கு கொண்டு செல்லும் முக்கிய ஆலைகளான விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம், செம்மேடு ஆகிய இடங்களில் உள்ள ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலைகளுக்கு 80 சதவீத கரும்புகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் இந்த ஆலைகளில் கரும்புக்கான நிலுவைத்தொகை, வாகன வாடகை, பதிவு செய்தல் தொடர்பாக பல பிரச்சினைகள் இருந்து வருகிறது.

இதனை நிவர்த்தி செய்வதற்காகவும், நிலுவைத்தொகை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வக்கீல் பாண்டியன் தலைமையில் சங்க செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பரமசிவம் உள்ளிட்ட விவசாயிகள், ஆலைகள் குழுமத்தின் தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது, நடப்பு கரும்பு 2022-2023-ம் ஆண்டிற்கான கிரைய தொகையை 40 நாட்களில் ஆலை நிர்வாகம் தருவதாகவும், கரும்பு பயிர்களுக்கு தனியார் இன்சூரன்ஸ் செய்வதாகவும் ஒப்புக்கொண்டனர். மேலும் விவசாயிகள் விரும்பும் ரக கரும்புகளை பயிர் செய்வதற்கும், விதைக்கரனைகளை ஆலை நிர்வாகம் இலவசமாக வழங்குவதாகவும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்