< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
புலிக்கல் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
|10 Nov 2022 12:15 AM IST
25 ஆண்டுகளுக்கு பிறகு புலிக்கல் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்கு பருவமழையும் மாவட்டத்தில் காரிமங்கலம், பாலக்கோடு தாலுகாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட புலிக்கல் ஏரி 25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த ஏரி பாசனத்தின் மூலம் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இதையடுத்து புலிக்கல் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஊர் பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்து ஏரியில் பூக்களை தூவினர். இந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் பழனிசாமி மற்றும் ஊர் பொதுமக்கள், விவசாயிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.