< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் மணலை தின்னும் நூதன போராட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

விவசாயிகள் மணலை தின்னும் நூதன போராட்டம்

தினத்தந்தி
|
16 Sept 2023 1:07 AM IST

விவசாயிகள் மணலை தின்னும் நூதன போராட்டம் நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை அரை நிர்வாணத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 44-ம் நாள் போராட்டமாக காவிரியில் தண்ணீர் திறக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் பயிர்கள் காய்வதால் உண்ண உணவில்லாமல் மண் (மணலை) தின்னும் அவல நிலை ஏற்பட்டுவிட்டது என்பதை காட்டும் விதமாக ஒரு தட்டில் விவசாயிகள் மணலை கொட்டி அதை தின்பது போன்ற நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அண்ணா பிறந்தநாளையொட்டி விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு அண்ணாசிலைக்கு அய்யாக்கண்ணு தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்