தஞ்சாவூர்
கோடை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
|கோடை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
சாலியமங்கலம், இரும்புதலை பகுதிகளில் கோடை ெநல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நெல் சாகுபடி பணி
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா சாலியமங்லம், இரும்புதலை பகுதிகளில் கோடைபருவத்தில் நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். சம்பா அறுவடை முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் சில நாட்கள் தரிசாக இருந்த வயல்களில் மோட்டார் பம்பு செட் உதவியுடன் விவசாயிகள் நீர்பாய்ச்சி உழவு செய்தனர்.
நடவு பணி மும்முரம்
கோடை சாகுபடி நெல் நடவுக்காக மோட்டார் பம்பு செட் உதவியுடன் விவசாயிகள் நெல் விதை தெளித்திருந்தனர். நெல் விதை நன்கு முளைத்து, நாற்றாகி வளர்ந்த நிலையில் தற்போது நாற்றுகளை பறித்து வயல்களில் நடவு நடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாலியமங்கலம், இரும்புதலை பகுதியில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு கோடை பருவத்தில் உளுந்து, பயறு வகைகளை விட அதிகளவில் நெல்சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.