ஈரோடு
பெருந்துறையில் விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம்
|பெருந்துறையில் விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம்
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் சார்பில், பெருந்துறை வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம், பெருந்துறை ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு அட்மா திட்ட தலைவர் மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சி.சசிகலா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும், வேளாண் உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள், வேளாண்மை கிடங்கில் உள்ள நுண்ணூட்டம், உயிர் உரங்கள் குறித்தும் அவற்றை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டது. இதில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் விஸ்வநாதன், தாமோதரன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டார்கள்.