< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
|14 July 2022 9:32 PM IST
விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
எலச்சிபாளையம்:
எலச்சிபாளையம் வட்டாரத்தில் உள்ள அகரம், சக்தி நாயக்கன்பாளையம், இலுப்புலி, கொன்னையாறு, உஞ்சனை கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு தலா 1,600 குடும்பங்களுக்கு 3,600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் எலச்சிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி, அட்மா திட்ட தலைவர் தங்கவேல், வேளாண்மை அலுவலர் இலக்கியா, அகரம் ஊராட்சி தலைவர் லட்சுமணன், உதவி வேளாண்மை அலுவலர் பூபதி, வெற்றிவேல், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்ரீதரன், தேவிகா ஆகியோர் செய்திருந்தனர்.