< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
சொத்து தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து - ஒருவர் கைது
|19 Jan 2023 3:15 PM IST
திருவள்ளூர் அருகே சொத்து தகராறில் விவசாயியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த சேலை கண்டிகை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58). விவசாயி. இவருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினரான சந்தானம் (56) என்பவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொத்து தகராறு காரணமாக பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கிடையே மீண்டும் சொத்து தகராறு தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்தானம் தான் வைத்திருந்த கத்தியால் கண்ணனை குத்தி விட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயம் அடைந்த கண்ணன் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நடந்த சம்பவம் குறித்து அவர் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து சந்தானத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.