< Back
மாநில செய்திகள்
விவசாயி பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

விவசாயி பலி

தினத்தந்தி
|
26 Nov 2022 10:47 PM IST

பழனி அருகே, மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.

பழனி அருகே உள்ள தெற்குத்தெரு மானூரை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 52). விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவர், தனது வீட்டில் இருந்து எதிர்புறம் உள்ள மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்வதற்கு சென்றார். அப்போது அங்குள்ள மானூர் சாலையை அவர் கடக்க முயன்றார். அந்த நேரத்தில் அந்த வழியாக கொழுமகொண்டான் கிராமத்தை சேர்ந்த சிவசுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக வேலுச்சாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வேலுச்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்