< Back
மாநில செய்திகள்
உழவர் உற்பத்தியாளர் நிறுவன குழு கூட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

உழவர் உற்பத்தியாளர் நிறுவன குழு கூட்டம்

தினத்தந்தி
|
8 Aug 2023 1:30 AM IST

நல்லேரு பெட் உழவர் உற்பத்தியாளர் நிறுவன குழு கூட்டம் வடமதுரையில் நடந்தது.

நல்லேரு பெட் உழவர் உற்பத்தியாளர் நிறுவன குழு கூட்டம் வடமதுரையில் நடந்தது. கூட்டத்துக்கு நிறுவனத்தின் இயக்குனர் குழு தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். தலைமை செயல் அதிகாரி ராமசாமி வரவேற்றார். வானவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வருங்கால செயல்திட்டங்கள், இயக்குனர்களின் பொறுப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் நிறுவனத்துக்கு 300 விவசாயிகளை பங்குதாரர்களாக சேர்ப்பது, தொழில் பரிசீலனை செய்வது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செயலாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்