< Back
மாநில செய்திகள்
வாகனம் மோதி விவசாயி பலி
அரியலூர்
மாநில செய்திகள்

வாகனம் மோதி விவசாயி பலி

தினத்தந்தி
|
31 Jan 2023 1:31 AM IST

வாகனம் மோதி விவசாயி உயிரிழந்தார்.

கீழப்பழுவூர்:

விவசாயி

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 38). விவசாயியான இவர் தற்போது திருமானூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு, அவரது சொந்த ஊரான சாத்தமங்கலம் சென்றுவிட்டு மீண்டும் திருமானூர் நோக்கி வந்தார்.

விரகாலூர் அருகே வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரபாகரன் படுகாயமடைந்தார்.

சாவு

இது பற்றி தகவல் அறிந்து வந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்