< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
வேன் மோதி விவசாயி பலி
|2 Oct 2023 11:32 PM IST
வேன் மோதி விவசாயி பலியானார்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி(வயது 53). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு வெண்மான்கொண்டான் கிராமத்தில் இருந்து தத்தனூர் பொட்டக்கொல்லை கடைவீதிக்கு திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மனகெதி கிராமத்தை சேர்ந்த செல்லப்பாண்டியன் மகன் செல்வமணி(29) ஓட்டி வந்த வேன் எதிர்பாராத விதமாக கோவிந்தசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் செல்வமணி மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.