< Back
மாநில செய்திகள்
ரெயில் மோதி விவசாயி பலி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

ரெயில் மோதி விவசாயி பலி

தினத்தந்தி
|
5 Jun 2023 5:38 PM IST

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயில் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 51), விவசாயி. இவர் நேற்று திருக்கச்சூர் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முருகன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தாம்பரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்