< Back
மாநில செய்திகள்
டிராக்டர் மோதி விவசாயி பலி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

டிராக்டர் மோதி விவசாயி பலி

தினத்தந்தி
|
24 Jan 2023 12:45 AM IST

டிராக்டர் மோதி விவசாயி பலியானார்.

பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் அருகே உள்ள சிறுகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வன்(வயது 54). விவசாயி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சிறுவாச்சூரில் இருந்து சிறுகன்பூருக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னாள் சென்ற பால் வண்டியை முந்தி சென்றபோது எதிரே கல்பாடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார்(28) என்பவர் அய்யலூர் செல்ல டிராக்டரில் பருத்தி லோடு ஏற்றி வந்தார். அச்சமயத்தில் டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலைத்தடுமாறி முத்துசெல்வன் கீழே விழுந்தார். இதில் முத்துசெல்வனின் பின் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து முத்துசெல்வனின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த முத்துச்செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிந்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்