< Back
மாநில செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கார் மோதி விவசாயி பலி

தினத்தந்தி
|
14 March 2023 10:32 PM IST

மோட்டார் சைக்கிள் மீது கார்மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

கன்னிவாடி அருகே உள்ள குயவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பச்சிவீரன் மகன் மகுடீஸ்வரன் (வயது 51). விவசாயி. நேற்று இவர், அதே ஊரை சேர்ந்த போஸ்கான் மகன் மகுடீஸ்வரன் (50) என்பவருடன் குயவநாயக்கன்பட்டியில் இருந்து கன்னிவாடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். செம்பட்டி-ஒட்டன்சத்திரம் சாலையில், குயவநாயக்கன்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது மதுரையில் இருந்து பழனி நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பச்சிவீரன் மகன் மகுடீஸ்வரன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு மகுடீஸ்வரன் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயம் அடைந்த மகுடீஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதுரை தட்டான்குளத்தை சேர்ந்த கார் டிரைவர் ராமர் (45) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்