< Back
மாநில செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
தேனி
மாநில செய்திகள்

கார் மோதி விவசாயி பலி

தினத்தந்தி
|
23 Oct 2023 2:30 AM IST

வீரபாண்டி அருகே கார் மோதி விவசாயி பலியானார்.

வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது50). விவசாயி. இவர் நேற்று தனது வீட்டில் இருந்து எஸ்.பி.எஸ்.காலனியில் உள்ள தோட்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கார் டிரைவர் கம்பத்தை சேர்ந்த அசோக் மீது வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்