< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
விருதுநகர்
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

தினத்தந்தி
|
18 Oct 2023 1:36 AM IST

மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.

நரிக்குடி அருகே உள்ள குறையறைவாசித்தான் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமணி (வயது 32). விவசாயி. இவருடைய மனைவி சித்திரைபானு. இவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில் முத்துமணி தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது மின்சாரம் இல்லாததால் தோட்டத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பீஸ் போட சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முத்துமணியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சித்திரை பானு அளித்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்